27 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ் அரசியல்வாதிகளின் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம் என்கிறார் விதுர

தேசிய மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இலங்கையின் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.

தொல்பொருள் சின்னங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தேசிய மரபுரிமைகள், கலை கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

கல்முதுர பகுதியில் நேற்று தொல்பொருள் சின்னங்களைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மரபுரிமைகள் காணப்படுகின்றன. மறைக்கப்பட்டுள்ள தேசிய மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முதன்மையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. நாடுதழுவிய ரீதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் மாத்திரமே தற்போது நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தால் மாத்திரம் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க முடியாது.

ஆகவே தேசியமரபுரிமைச் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிகிரியா குன்று, தலதாமாளிகை ஆகியவை உலக மரபுரிமையாகக் காணப்படுகிறதே தவிர தேசிய மரபுரிமையாக அடையாளப்படுத்தப்படவில்லை.

இவற்றை தேசிய மரபுரிமையாக அடையாளப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்த முடியாது.

தேசிய மரபுரிமைகளையும், நாட்டின் தனித்துவத்தையும் உலகத்துக்கு அடையாளப்படுத்துவோம். கடந்த அரசாங்கம் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த மாதம் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் சட்டநடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துச் சவால்களையும் வெற்றி கொள்ளத் தயாராகவுள்ளோம். தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் எந்தவிதமான மக்களின் மத மற்றும் இன உரிமைகளும் பாதிக்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்- என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles