இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் வி.வி.எஸ். லட்சுமணன்?

0
130

உலகக் கிண்ணத் தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடருக்கான இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமணன் செயற்படுவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியைத் தொடர ராகுல் டிராவிட் விருப்பம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தலைமைப் பயிற்சியாளர் பதவியை வி.வி.எஸ். லட்சுமணன் ஏற்பார் என்று கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.