உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாகை மீது, வவுனியாவில் முட்டை வீச்சு!

0
162

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இன்று 2500 ஆவது எட்டியுள்ளது.

தொடர் போராட்டத்தின் 2500 ஆவது நாளான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அவர்களுடைய போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும், தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு எனவும் வலியுறுத்தினர்.