கிறிஸ்மஸ் நாளில் நள்ளிரவு ஆராதனைக்குச் சென்ற வர்த்தகர் வீட்டில் கொள்ளை

0
87

உடப்புவ, புனவிட்டிய பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டை உடைத்து திங்கட்கிழமை இன்று அதிகாலை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு தனது குடும்பத்துடன் நள்ளிரவு ஆராதனைக்கு குறித்த தொழிலதிபர் சென்ற வேளையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

7 மில்லியன் ரூபா பெறுமதியான நகையும் ஒரு தொகை பணமும் திருடப்பட்டுள்ளதாக வர்த்தகர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

வர்த்தகர் நள்ளிரவு ஆராதனையை முடித்துவிட்டு வீடு திரும்பிய வேளை சம்பவம் குறித்து தெரியவந்துள்ளதுடன்,  வீட்டின் ஜன்னலை உடைத்து திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.