நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலிய கந்தப்பளை பகுதியில் அதிக தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்நிலையில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக உடபுஸ்ஸல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் கந்தப்பளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் பிரதான வீதி வெள்ளநீரில் மூழ்கியதில் போக்குவரத்து தடைப்பட்டதுடன் மேலும் சில வீதிகள் சேதமடைந்துள்ளன.அத்துடன் நுவரெலியா பிரதேச செயலகத்தின் கந்தப்பளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமையே விவசாய காணிகள் நீரில் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.