ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை

0
113
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த மே மாதம் பிற மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளாகியிருந்தார்.இதன்படி, குறித்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 20 ஆம் திகதி உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்று ஒத்திவைக்கப்பட்டது.மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின்கருத்துகளின் காணொளி காட்சிகள் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தன.இதனை தொடர்ந்து, மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தமது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.