பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு டெங்கு!

0
122

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை அவர் இழக்க நேரிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு பதிலாக இலங்கை அணிக்கு செவோன் டேனியல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.