ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி இலங்கை வருகிறார்

0
202
ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி ஜனவரி 11 முதல் 12 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் பாராளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் லங்கா நிப்பென் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.