கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள, அரச தானிய பாதுகாப்பு களஞ்சியத்தில், களஞ்சியப்படுத்தலில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், இன்று, கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி அரச தானிய களஞ்சிய முகாமையாளர் எஸ்.நேசராஜன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், நிதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் எஸ்.தயானந் பங்கேற்று, விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தானிய களஞ்சியசாலைகளில், விவசாயிகள் நெல்லை களஞ்சியப்படுத்த ஆர்வம் காட்டாமைக்கான காரணங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
படிவம் ஒன்றும் வழங்கப்பட்டு, விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக தகவல்களும் பெறப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில், மாவட்ட விவசாய பணிப்பாளர் எஸ்.செல்வராஜா, கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ராஜ்வினோத், கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் பங்கேற்றனர்.