அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது

0
62

அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை பெய்துவரும் நிலையில், 110 அடி கொள்ளளவுடைய சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் 110 அடியினை தாண்டி மேலதிக நீர்
வெளியேறி வருகின்றது.
இந்நிலையில் சகல வான் கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் 5.5 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப்
பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.