சிகிரியா செல்லும் பயணிகள் மலசலகூட வசதியின்றி சிரமம்!

0
100
உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சிகிரியாவை பார்வையிட வரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், மலசலகூட வசதியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக உள்ளூர் சுற்றுலா பயணிகள் சீகிரியாவுக்கு செல்வதை தவிர்த்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிகிரியா ஒரு உலக பாரம்பரிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் சிகிரியாவுக்கு பயணிக்கின்றனர்.தற்போது, ​​இங்குள்ள இரண்டு பொதுக் கழிவறை அமைப்புகளும் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளால் சுகாதாரப் பணிகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இது தொடர்பில் தம்புள்ளை உள்ளுராட்சி சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில் : ​​இது தொடர்பில் பல திட்டங்கள் தீட்டப்பட்ட போதிலும் மழை பெய்யும் போது அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி மலசலகூட குழிகள் நிரம்பிவிடுகிறது அதனால் மலசலகூடங்களை முறையாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.