2024 வரவு -செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 5,000 ரூபா அதிகரிப்பு, ஜனவரி முதல் அமுலுக்கு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக ஆசிரியர்களின் சம்பளத்திற்கான பணம் ஏற்கனவே திறைசேரிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் நிதி நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி 1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளார்.இந்த சம்பள உயர்வு ஏப்ரல் மாதம் அமுல்படுத்தப்பட இருந்தது. ஜனாதிபதியின் பலமான கோரிக்கையை அடுத்து, அரசாங்கம் தனித்துவமான நாணய முகாமைத்துவம் தொடர்பில் செயற்பட்டு வருகின்றதுடன், இந்த சம்பள அதிகரிப்பின் ஒரு பகுதியை ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றார்.கல்வித்துறைக்கு பணம் ஒதுக்கிய பின்னர் , பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட உத்தரவின் கீழ் பணம் விடுவிக்கப்பட்டு, சுமார் 1.4 மில்லியன் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கவுள்ளதாகவும், சம்பள உயர்வில் 5,000 ரூபா சம்பளமாக அல்லது கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.