கரையோர ரயில் சேவையில் தாமதம்

0
130

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பாணந்துறை மற்றும் எகொட உயன ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று திங்கட்கிழமை (22) காலை தண்டவாளத்தில் வெடிப்பு  ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து காலி நோக்கி செல்லும் மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.