ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் மொஹமட் ஷமி!

0
104

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொஹமட் ஷமி வெளியேறியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொஹமட் ஷமி குறித்த தொடரிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொஹமட் ஷமி இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.