பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தி இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்றைய தினம் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு திகதியிடப்பட்டுள்ளது.