இந்தியா, தமிழ்நாடு இராமேஸ்வரம் வேதாளை சிங்கிவலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கின்றது.
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை தேடும் பணியில் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வட மாநிலத்தில் இருந்து கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கானர் கருவி வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்று ஐந்தாவது நாளாக கூபா வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் தங்க கட்டிகளை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.