பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு

0
146

கட்டான – கிம்புலாபிட்டி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில், அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த தீ பரவலில், காயமடைந்த 3 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில், சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் நேற்றிரவும் மற்றொருவர் இன்று காலையும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இரண்டு பேரும் 21 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.