இன்றும் மூன்று விமான சேவைகள் இரத்து!

0
68

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிக்கவிருந்த மூன்று விமான சேவைகள் இன்றும் இரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 7.25 அளவில் ஹைத்ராபாத் நோக்கி பயணிக்கவிருந்த யு.எல்.177 என்ற விமானமும், 8.55 அளவில் காத்மண்டு நோக்கி பயணிக்கவிருந்த யு.எல்.181 என்ற விமானமும் இரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இன்று அதிகாலை கோலாலம்பூர் நோக்கி பயணித்த எம்.எச்.178 என்ற விமான சேவையும் இரத்து செய்யப்பட்டதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.