Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
2023 ஆம் ஆண்டில் கைதிகள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியளித்ததன் மூலம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.கைதிகளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ததன் மூலம் 2023ஆம் ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.சிறைக் கைதிகள் பயிர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஊக்குவிப்பதுடன், சிறைக் கைதிகள் சிறைச்சாலைக்குள் சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகுவதற்கு உதவுவதாகவும், சிறைக் கைதிகள் தண்டனைக்காலத்தின் பின் சமூகத்துடன் இணைக்கப்படும்போது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 7 கைதிகளில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது மருத்துவ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது, எனவே கைதிகளை விவசாய நடவடிக்கையில் ஈடுபடுத்துவதும் அவர்களது மனோநிலை மேம்பாட்டுக்கு உதவுகிறது.“கைதிகள் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள், அவர்கள் தனியுரிமை உணர்வை இழக்கிறார்கள் மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகள் இல்லை, அத்துடன் அவர்கள் சிறையில் இருக்கும் போது சமூக தொடர்புகளை இழக்கிறார்கள். எனவே அவர்கள் விடுவிக்கப்படும் போது சமூகத்துடன் மீண்டும் அனுசரித்து செல்வது கடினமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க அவர்களை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறோம் ” என்றார்.