6 நாடுகளின் தூதுவர்கள் – அநுர குமார சந்திப்பு

0
91
ஆறு நாடுகளின் தூதுவர்கள் இன்று இன்று ம.வி.மு. தலைமையகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர்.பாலஸ்தீனத்தின் தூதுவர், துருக்கி குடியரசின் தூதுவர், பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர், இந்தோனேசிய குடியரசின் தூதுவர் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர், மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர்
ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.