யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர், பருத்தித்துறை கடற்படையினால், இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்பகுதியில், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக, கடற்படையினர், தொடர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குடத்தனை பகுதியை சேர்ந்த இருவரையும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, அவர்களது உடமைகளுடன், யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.