27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பழமையான பாண் துண்டு கண்டுபிடிப்பு:

துருக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியொன்றின் போது உலகின் பழமையான பாண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, 8600 ஆண்டுகள் பழமையான அந்த பாண் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

அது, தெற்கு துருக்கியின் கொன்யா மாகாணத்தில் உள்ள Katalyouk தொல்பொருள் தளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, பண்டைய பாணின் கண்டுபிடிப்பு அசாதாரணமானது என்றும் இது உலகின் பழமையான பாண் எனவும் துருக்கியின் அனடோலு பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவரான தொல்பொருள் ஆய்வாளர் அலி உமுத் துர்கன் தெரிவித்துள்ளார்.இந்த கண்டுபிடிப்பானது, பண்டைய கால மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் அக்கால நாகரிகத்திற்கான தடயங்களைத் எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது.கண்டுபிடிக்கப்பட்ட பாண், உருண்டையாகவும், தடிமனாகவும், மென்மையான பொருளால் நிரப்பப்பட்டதாக காணப்பட்டுள்ளது.மேலும், பாண் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கோதுமை, பார்லி, பட்டாணி என்பனவும் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles