கனடாவில் ரொரன்றோவிலுள்ள Regent Park பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவமொன்றினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலின் போது சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் மருத்துவ உதவிக்குழுவினரும் விரைந்த நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்டு இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்து கிடப்பதை கண்டுள்ளனர்.அதில் இருந்த ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள்.
அதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய ஆணும் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.
மேலும், அவர்களுடன் இருந்த பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்தோடு, காவல்துறையினர் தாக்குதலை நடத்திய சந்தேகநபரை துரத்தி பிடிக்க முயன்ற போது அவர்களையும் சந்தேகநபர் தாக்கியுள்ளார்.
அந்த தாக்குதலினால் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு கையிலும் காலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சந்தேகநபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.இந்நிலையில், தாக்கப்பட்டவர்களும் தாக்குதல்தாரியும் உறவினர்கள் என தெரிவித்த காவல்துறையினர் மற்றவர்களுடைய பெயர் முதலான எந்த விவரங்களையும் இப்போதைக்கு வெளியிட முடியாது என கூறியுள்ளனர்.