ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சிகளை தமிழ்த் தலைமைகள் எடுத்து, கடந்த காலங்களில் தமிழ்
மக்கள் சந்தித்து வந்த ஏமாற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்டனம் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டார்.