விஜய் டிவியில் இருந்து பல பிரபலங்கள் சினிமாவுக்கு வந்திருக்கின்றனர். அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இருப்பது புகழ் தான். அவர் படங்களில் காமெடியாக நடிப்பது ஒருபக்கம் இருக்க ஹீரோவாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் புகழ் முதல் முறையாக ஹீரோவாக நடித்தார்.அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.இந்நிலையில் தற்போது புகழ் தனது இரண்டாம் படத்தை தொடங்கி இருக்கிறார். டைமண்ட் தோனி என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.