29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்!

கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றும் நாளையும் ரயில் சேவைகள் தாமதமாக இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றைய தினம் 25 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு மார்க்கத்தில் மாத்திரம் ரயில் சேவை இடம்பெறுவதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles