முருகன், ரொபர்ட் பயஸ்,ஜெயக்குமாரிடம் விமான நிலையத்தில் தீவிர விசாரணை!

0
70

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில், 32 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து, விடுதலை செய்யப்பட்ட முருகன்,ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இன்று நண்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும், அவர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைகளுக்குட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முருகன்,ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை அழைத்து வருவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் சட்ட ஆலோசகர் க.சுகாஸ், தவத்திரு வேலன் சுவாமி ஆகியோர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.


முருகன்,ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் இந்தியாவிலிருந்து வருகை தந்த சட்டத்தரணி புகழேந்தி உட்பட அவர்கள், இவர்களின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.