அம்பாறை மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நீடித்து வரும் நிலையில், தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில், கல்முனை மற்றும் ஆலையடிவேம்பு பகுதிகளிலே கன மழையின் பாதிப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.