அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில்,8 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கு இலவச அரிசி பொதி

0
102

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில், இலவச அரசி வழங்கும் திட்டத்தினூடாக, 8 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கு இலவச அரசி பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஜனாதிபதியினால், நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தினை தொடர்ச்சியாகப் பேணுவதற்காக, உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இவ் இலவச அரிசி வழங்கும் திட்டம் 2 மாதங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா, சமுர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம், கிராம நிருவாக சேவை உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.