மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் இன்று கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில்

0
44

கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு மருதமடு மாதாவின் திருச்சொருபம் இன்று வருகை தந்தது. மடு மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

புனித மாதாக்கள் போன்று வேடமணிந்து பாண்ட் மற்றும் தமிழ் இன்னியம் மூலம் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது மன்னார் ஆயர், அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விசேட வழிபாடு இடம்பெற்றது.

மடுமாதா முடிசூடப்பட்டு 100வது ஆண்டு நிறைவையொட்டி குறித்த திருச்சொருப தரிசனம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
அத்துடன் 1999ம் ஆண்டு 75ம் ஆண்டு பூர்த்திக்காக இவ்வாறு பயணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகர் உள்ளிட்ட சில பகுதிகளிற்கு சென்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.