அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் யு.எல்.எம்.சகீல் வேண்டுகோளுக்கமைய, சமூகநலன் அமைப்பின்; தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில், வைத்தியர் குணாளினி சிவராஜூன் மேற்பார்வையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. சிரமதானத்தில் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது, வைத்தியசாலையின் வெளிச் சூழலில் காணப்பட்ட புற்கள் குப்பைகள் என்பன அகற்றப்பட்டது.