யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி!

0
54

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

ஒரேயொரு விண்ணப்பமே கிடைத்தது. இதனால், இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, திட்ட யோசனைகள் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எயார் இன்டிகோ விமான சேவை நிறுவனமும் விமான பயணத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

அலையன்ஸ் எயார் நிறுவனம் மட்டுமே தற்போது யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.