2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது.
பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
அவர்களில் 3 இலட்சத்து 87 ஆயிரத்து 648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65 ஆயிரத்து 331 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்திலும் கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டுள்ளன.
இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு வவுனியாவில் 4309 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 16 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.