சமுர்த்திஅபிவிருத்திதிணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி சந்தைப்படுத்தல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் வழிகாட்டல் தொடர்பான விழிப்பூட்டல்
கருத்தரங் குபிரதேசசெயலகங்கள் ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மண்டபத்தில் இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு இன்று நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவிப ;பிரதேசசெயலாளர் ஆர்.சுபாகர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி தலைமைப் பீடமுகாமையாளர்
என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் கருத்தரங்கில் கருத்திட்டமுகாமையாளர் கமலபிரபா, முகாமைத்துபணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன்,
கருத்திட்டஉதவியாளர் ஆனந்தராசா ஆகியோர் கலந்துகொண்டதுடன், வளவாளர்களாக அம்பாறை மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.அருளானந்தம்,
திருக்கோவில் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கங்காதரன், நைட்டா நிறுவனத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் பி.எம்.வாஜித், ஆலையடிவேம்பு மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் றியாஸ்லின், சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிம்சாத் உள்ளிட்டவர்கள்
கலந்துகொண்டனர்.
பாடசாலைக் கல்வியைநிறைவுசெய்து தொழிலுக்காக காத்திருக்கின்றவர்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சியை நிறைவுசெய்து என்.வி.கியு சான்றிதழ் பெறவுள்ளவர்கள்
என பலர் இதில் கலந்துகொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில், சமுர்த்தி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு