மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு!

0
56

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் புத்தளம், முந்தல் பிரதேசத்தில் உள்ள தனது கால்நடைப் பண்ணையில் மின் இணைப்புக்களைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மின்சார இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.