ரி20 உலகக் கிண்ண போட்டிக்கு ISIS ஆதரவுக் குழுவினால் அச்சுறுத்தல்

0
76

இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

நியூயோர்க்கில் இரத்தக்களறி ஏற்படலாம் என சுவரொட்டி ஒன்று வெளியானதை அடுத்து பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

ISISக்கு ஆதரவான குழுவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஒரு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருப்பதைக் காட்டுகிறது. 

‘நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ள அந்த வரைபடத்தில் தொடர்ந்து ‘நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்’ என இரத்தச் சிவப்பில் எழுதப்பட்டுள்ளது. சுவரொட்டியில், நசவ் விளையாட்டரங்கில் ஜூன் 9ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.