ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்யலாம் – ஈரான்

0
73

ஈரானில் அடுத்த மாதம் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து நாள் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவின்படி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை இடைக்கால ஜனாதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என்ற பின்னணியில் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரியும் முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து நாள் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.