யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் கல்விப் பொதுத்தரா தர உயர் தரப் பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெற்ற மாணவனின் வீட்டிற்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனான வரதராசா சந்தோஷ் கணிதப்பிரிவில் கணிதப்பிரிவில் க.பொ.த தரப் பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் அவர் மாவட்ட ரீதியில் 55 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மாணவனின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.