மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கான புதிய கட்டடத் தொகுதி, திராய்மடுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சமய சம்பிரதாய நிகழ்வுகளுடன், நிர்வாகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை மாவட்டச் செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், பாரம்பரிய முறைப்படி பால் காய்ச்சி, சர்வமத தலைவர்களுடன் ஆசியுடன்
கட்டடத் தொகுதியின், ஒரு பகுதியில் நிர்வாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், காணிப் பகுதிக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் உட்பட மாவட்டச் செயலக அதிகாரிகளும்
நிகழ்வில் பங்குபற்றினர்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் ஒல்லாந்தர் கால கட்டடமான, டச் கோட்டையில் இயங்கி வரும் நிலையில், நிர்வாக நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்கும்
நோக்கில், திராய்மடுவில் 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, நிர்மாணிக்கப்பட்ட, புதிய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ள நிலையிலேயே, முதற்கட்ட சம்பிரதாய
நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.