கொவிட் காலத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரல்!

0
92

கொவிட் காலத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற சபையில் மன்னிப்பு கோரியுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இன்றைய அமர்வில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

பாலின சமத்துவச்சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரிய விடயமாகவும் அமைலாம். ஆகவே இது தொடர்பில் ஆராய நாடாளுமன்ற குழுவொன்று அமைக்கப்படவேண்டும். அதேபோன்று குறித்த விடயத்தில் உயர் நீதிமைன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன், கொவிட் பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இந்த விடயம் பெரும் வேதனையை அழிக்கும் விடயமாக அமைந்திருந்தது. குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில் அதேவேளை இந்துக்கள், பௌத்தர்கள் கிஸ்தவர்களுக்கும் இதன் ஊடாக வேதனையை அனுபவிக்க நேர்ந்தது. அவ்வேளை இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு உடல்கள் தகனம் செய்யப்படவேண்டும் என பரிந்துரைத்தது. உயர் நீதிமன்றமும் இதனை அங்கீகரித்தது. ஆகவே அரசாங்கம் அதனை பின்பற்ற வேண்டிய நிலை காணப்பட்டது. மாற்றவழிகள் எதுவும் காணப்படவில்லை. உடலை தகனம் செய்வதற்கான உரிமை அடக்கம் செய்வதற்கான உரிமை அத்துடன், ஒருவர் தனது உடலை வைத்திய சாலைக்கு வழங்கும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன் . அத்துடன் கொவிட் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் , முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுபவர்கள் உத்தேச வாடகை வரியை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்படமாட்டாது. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கே இந்த வரி விதிக்கப்படும்.