அசஞ்சேயின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களிற்கு நன்றி – ஸ்டெல்லா அசஞ்சே

0
56

விக்கிலீக்ஸ்ஸ்தாபகர்களில்ஒருவரான  ஜூலியன் அசஞ்சேயின் விடுதலைக்காக குரல்கொடுத்தவர்களிற்கு அவரின் மனைவி ஸ்டெல்லா நன்றியை தெரிவித்துள்ளார். உங்கள் பேரதரவு குறித்து நாங்கள் எவ்வளவு நன்றியுடையவர்களாக உள்ளோம் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது பல வருடங்களாக அவரின் விடுதலைக்காக நீங்கள் அணிதிரண்டிருக்கின்றீர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கின்றீர்கள் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் பிறந்த சட்டத்தரணியான ஸ்டெல்லா 2015 முதல் அசஞ்சேயுடன் உறவில் உள்ளார்.ஸ்டெல்லா அசஞ்சேயின் சட்டகுழுவில் இணைந்தவேளை இருவரும் முதலில் சந்தித்தனர்.அசஞ்சே சிறையில் இருந்தவேளை இருவரும் திருமணம் செய்துகொண்டனர் . இதேவேளை தனது மகனின் மிக நீண்டகால சட்டபோராட்டம் முடிவிற்கு வருவது குறித்துஜூலியன் அசஞ்சேயின் தாயார்கிறிஸ்டின் அசஞ்சே நன்றியை தெரிவித்துள்ளார்.

எனது மகனின் சோதனைகள் இறுதியாக முடிவிற்கு வந்தது குறித்து நான் நன்றியுடையவளாகயிருக்கின்றேன் இது அமைதியான இராஜதந்திர முயற்சிகளின் ஆற்றலையும் சிறப்பையும் வெளி;ப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.பலர் எனது மகனின் சூழ்நிலையை தங்கள் சொந்த நிகழ்ச்சிநிரல்களை முன்னிறுத்த பயன்படுத்தியுள்ளனர்இஎனவே ஜூலியனின் நலனிற்கு முதலிடம் கொடுத்த கண்ணிற்கு தெரியாத கடின உழைப்பாளிகளிற்கு நான் நன்றி உடையவனாகயுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.தனது மகனிற்காக பரப்புரை செய்தமைக்காக அசஞ்சேயின் தந்தை ஜோன்சிப்டன் அவுஸ்திரேலிய  அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.