தம்புள்ளையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்: பி குழுவில் இலங்கை

0
68

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 ஆசிய கிண்ண  கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இப் போட்டியில் எட்டு நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றவுள்ளன.ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான்,  ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம் ஆகியனவும் பி குழுவில் பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகியனவும் இடம்பெறுகின்றன.

இலங்கை தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷை ஜூலை 20ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.தொடர்ந்து 22ஆம் திகதி மலேசியாவையும் 24ஆம் திகதி தாய்லாந்தையும் இலங்கை எதிர்த்தாடும்.அரை இறுதிப் போட்டிகள் ஜுலை 26ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூலை 28ஆம் திகதியும் நடைபெறும்.

பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் ஆசிய நாடுகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் போட்டியாக மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி அமையவுள்ளது.