பதில் சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க இன்று பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலத்தை மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்கு கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இந்த பிரேரணைக்கு சார்பாக 3 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த போதிலும் 5 வாக்குகளினால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பதில் சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.