கனடா நாட்டில் முதன்முறையாக பெண் ஒருவர் நாட்டின் உயர் இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனேடிய ஆயுதப் படைகளில் பாலியல் மற்றும் தவறான நடத்தைகளை ஒழிப்பதற்கான முயற்சிகளில் முன்னணியில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஜென்னி கரிக்னன் என்பவரே குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாதுகாப்பு ஊழியர்களின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க கனடா சர்வதேச அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், ஒரு முக்கியமான கட்டத்தில் கரிக்னன் தலைமை ஏற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.