மட்டக்களப்பு மாவட்டவேலையற்ற பட்டதாரிகளின்போராட்டம் தொடர்கிறது

0
101

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நான்காவது நாளாக, இன்றைய தினம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தினை
முன்னெடுத்தனர்.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் சிலர் தமது கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டக்காரர்கள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.
தமது தொழில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள்
குறிப்பிட்டனர்;.