பரந்தன் பூநகரி வீதி விபத்தில் ஒருவர் பலி!

0
135

பரந்தன், பூநகரி வீதியில் இன்று மதியம் கப்ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து இடம்பெற்றது.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் பரந்தன் பூநகரி வீதியின் குடமுருட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதான ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

இதனிடையே அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான கப் ரக வாகனத்தின் சாரதி உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.