நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு, 19 பேரைக் காணவில்லை!

0
75

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நிலச்சரிவில் சிக்கி 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 35 பேர் மண்சரிவில் சிக்கிய நிலையில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அதேவேளை, நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.