மட்டு.மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் நோயளிகளுக்கு ஒவ்வாதவுணவை வழங்கியதாக முறைப்பாட்டு செய்யப்பட்டிருந்த நிலையில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் பொதுச் சுகாதார பரிசோதகர் வழிகாட்டலில் மேற்பார்வையிடம் பெற்றிருந்தது.
பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வைத்தியசாலை நோயாளிகளுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரர் மற்றும் மனித நுகர்விற்கு ஒவ்வாதவுணவை வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் முடிவில் இன்று நீதிவானினால் ‘ உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்ததுடன் ஒப்பந்த காரரிற்கு 10,000 ரூபாய் தண்டப்பணமும் அதை உரிய தவணையில் கட்டத்தவறின் 3 மாதகால சிறைத்தண்டனையும், 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறை தண்டனையும் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவை உற்பத்தி செய்த கடை உரிமையாளரிற்கு 5,000 ரூபாய் தண்டப்பணமும் ஒரு மாதகால சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.