வடக்கில் பாரிய கஞ்சா கடத்தல் முறியடிப்பு!

0
86

மான்னார் பேசாலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 28 கிலோ 760 கிராம் கேரளா கஞ்சா வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளதுடன், இரு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கூலர் ரக வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் விசேட புலானய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலையிலான குழுவினரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கூலர் ரக வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பேசாலை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 30 வயதானவர்கள் எனவும், மேலதிக விசரானைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.