ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களிலும், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில், நேற்று நள்ளிரவு முதல், ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால், இன்று காலை, பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இதனால், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.